பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

165



பிறவித் துயரங்களை உணர்ந்து தெளிந்த மகான்கள் பிறவாதிருக்கவுரிய வழிகளே விரைந்து அடைந்துகொள்ளுகின்றனர். அந்த உண்மையான தெளிவு எளிதில் அமையாது. உள்ளம் தூய்மையான உத்தமர்க்கே தத்துவ ஞானம் உதயமாகிறது.

இனிப்பிறவா முடிவான பிறப்பிலே

  மெய்ஞ்ஞானம் எளிதில் உண்டாம்; 

பனிச்சுடர்வெண் நித்திலங்கள் உத்தமமாம்

  மூங்கில் அல்லால் படுவது உண்டோ? செனித்தவரின் மேலோராய் நல்லோராய் 
  மித்திர ராய்த் தெளிந்தோர் ஆகி 

அனித்தமறும் உத்தமராய் ஞானிகளாம்

  குணம்எல்லாம் அவரைச் சேரும்.
                             (ஞானவாசிட்டம்) மெய்யுணர்வே வெய்ய பிறவியை நீக்க வல்லது. அந்த மெய்ஞ்ஞானம் எப்பொழுது தோன்றும்? இனிமேல் யாதொரு பிறவியும் இல்லை என்னும்படி புனிதராய்ப் படிஏறி வந்துள்ள உத்தம முத்தருக்கே அது உரிமையாய் அமையும்: அவ்வுண்மையை இதில் ஒர்ந்து உணர்ந்து கொள்கிறோம்.

உயிரையும் உயிர்க்கு உயிரான பரமனையும் உண்மையாக உணர்வதே மெய்ஞ்ஞானம். அந்த ஞான ஒளி தோன்றவே ஈன இருள் எல்லாம் அடியோடு இரிந்து ஒழிந்து போம்.

உயிர் பரமாய் நிற்றல்.

துயர் நீங்கி உயிர் உயர் இன்பம் உறும்நிலையை இது துலக்கியுளது. சிவனைச் சிவம் ஆக்கிக்கொள்