பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

அணியறுபது

வதே தெளிந்த ஞானம். உள்ளம் தெளிந்து தூய்மையான பொழுது பேரின்ப வெள்ளமே அங்கே நேரே பெருகி வருகிறது.

எடுத்த தேகம் இறக்குமுனே எனைக்
கொடுத்து நின்னையும் கூடவும் காண்பனோ?
அடுத்த பேரறிவாய்அறி யாமையைக்
கெடுத்த இன்பக் கிளர்மணிக் குன்றமே!
                                                   (தாயுமானவர்)

                             என்னை எடுத்துக்கொண்டு உன்னைக் கொடுத்தருள் என்று ஈசனை நோக்கித் தாயுமானவர் இவ்வாறு பேசியிருக்கிறார். எவ்வளவு உறவுரிமையிருந்தால் இவ்வளவு உறுதியா உரையாட வரும்?
                       

படமுடியாது இனித்துயரம் படமுடியாது அரசே! பட்டதெலாம் போதும்இந்தப் பயம்தீர்த்து இப்பொழுது

                                          -என்

உடலுயிர்ஆ தியஎல்லாம் நீஎடுத்துக் கொண்டு உன் உடலுயிரா தியஎல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்!

                                      (அருட்பா) ஆண்டவனை நோக்கி இராமலிங்க அடிகள் இப்படி வேண்டியிருக்கிறார். சீவான்மாவும் பரமான்மாவும் ஒரே உருவம்; ஒரே சோதி. இந்த உண்மையை உள்ளம் தெளிந்த ஞானிகள் உணர்ந்துகொள்ளுகின்றனர். கொள்ளவே ஏகபோகமாய் இன்பம் எய்துகின்றனர். இயல்பாகவே இன்பமயமான ஆன்மா மயல் ஒழிந்த உடன் உயர் பரமாய் ஒளி பெற்றுச் சுகவாரிதியாய்த் திகழ்கின்றது.

இருவினையும் மலமும்அற இறவியொடு பிறவியற

 ஏக போகமாய் நீயும் நானுமாய்