பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அணியறுபது


நூல்


1. கண்ணுக் கருள் அணியாம் கைக்கீத லேஅணியாம்
பெண்ணுக்குக் கற்பொன்றே பேரணியாம்-மண்ணுக்கு
நீதி ஒழுக்கம் நிறையறிவோ டஞ்சாமை
ஆதியுடை வேந்தே அணி.

(க)
இ-ள்.

கருணே கண்ணுக்கு அழகு ஈகை கைக்கு அழகு; கற்பு பெண்ணுக்கு அழகு; அரசன் மண்ணுக்கு அழகு; நீதி ஒழுக்கம் நிறை அறிவு அஞ்சாமை முதலிய அரிய நீர்மைகள் அரசனுக்கு அழகு என்க.

அணி=அழகு அலங்காரம்: ஆ ப ர ண ம்: பெருமை. நன்மை. இன்னவாறு பல பொருள்களை அணி என்னும் சொல் குறித்து வருகிறது.

அணியப்படுவது: அண்ணி யிருப்பது அணி என வந்தது. காரணக்குறி கருதி யுணர வுரியது.

மணி பொன் முதலியவைகளாலாய அணிகளை மகளிரும் ஆடவரும் அணிந்து வருதல் வழக்கமாய் வந்துளது. மனித வளர்ச்சி இதனால் விளங்குகிறது.

தம்மை அணிந்து கொண்டவர்க்கு அழகு செய்து வருதலால் ஆபரணங்கள் அணிகள் என நேர்ந்தன. காட்சியளவில் அணி மாட்சி தருகிறது.

அழகு என்பது கண்டவர் விரும்பி மதிக்கும் இனிமை. விழைந்து நோக்கி வியந்து மகிழ்ந்து வர வியனாய் வாய்ந்தது அழகு என அமைந்தது.