பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணியறுபது

25

கற்பு ஒன்றே என்றதில் ஏகாரம் அதன் ஏற்றத்தைத் தேற்றமா விளக்கி நின்றது. ஆருயிரின் பேரணியான அதனால் புண்ணியங்கள் பொலிந்து திகழ்கின்றன: எண்ணரிய நலன்கள் விளைந்து வருகின்றன; விண்ணவரும் வியந்து தொழுகின்றனர்.

கற்பினுக்கு அரசினைப் பெண்மைக் காப்பினைப்
பொற்பினுக்கு அழகினைப் புகழின் வாழ்க்கையைத்
தற்பிரிந்து அருள்புரி தருமம் போலியை
அற்பினத் தலைவனும் அமைய நோக்கினான்.

(இராமா: மீட்சி 60)

பெண்மைக்கு உண்மை நிலையமான சிதையை இது இவ்வாறு குறித்துள்ளது. குறிப்புகள் கூர்ந்து ஓர்ந்து சிந்திக்கத் தக்கன.

உலக மாந்தரை நீதியாப் பாதுகாத்தற்குத் தலைமை தாங்கியுள்ளவன் வேந்தன் என நேர்ந்தான். உண்ணும் உணவாலும் பருகும் நீராலும் மனிதர் வாழ்ந்து வரினும் அந்த வாழ்வு இடையூறின்றி இனிது நடந்து வருவது அரசனது நீதியான ஆட்சி முறையாலே யாம்.

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலே உலகம்.

- (புறம் 186)

உலகிற்கு அரசன் உயிர் என்று மோசிகீரனார் என்னும் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியுள்ளார்.

நெல்லுயிர் மாந்தர்க் கெல்லாம்
நீருயிர் இரண்டும் செப்பின்
புல்லுயிர் புகைந்து பொங்கு
முழங்கழல் இலங்கு வாட்கை

4