பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அணியறுபது

நீராழி சூழ்ந்துள்ள நிலவலயத்து
உயிர்களெலாம் துயர்கள் இன்றிச்
சீராக வாழ்ந்துவரத் தேர்வேந்தர்
சேர்ந்துவந்தார் செங்கோல் ஏந்திப்
பாராளும் உரிமையினைப் பரம்பரையாப்
பற்றிநின்றார் பண்பு நீதி
நேராரும் நேராத வீரமுதல்
நீர்மையெலாம் நேர்ந்து நின்றே. (2)

பெற்றதந்தை பிள்ளைகளைப் பேணிவரும்
பெற்றிஎனப் பெருநீர் வையத்து
உற்றவுயர் மக்கள்எலாம் உரிமையுடன்
எவ்வழியும் உவந்து வாழப்
பற்றியவெண் குடைகவித்து முடிசூடிப்
பரிவோடு பேணி யாரும்
கொற்றவன்என்று ஏத்திவரக் கோமுறைகள்
புரிந்துவரின் குலவேந் தாவார். (3)

கல்வியெலாம் கற்றவராய்க் கற்றவரைக்
கண்ணாகக் கருதி நாளும்
நல்வினைகள் எவ்வழியும் செவ்வையா
நடந்துவர நாடி நோக்கிப்
புல்வினைகள் எவரிடமும் எவ்வகையும்
யாண்டுமே புகாமல் போக்கிப்
பல்வழியும் ஒளியேறிப் பரவிவரப்
பார்காப்பார் பண்பார் வேந்தர். (4)

காட்சியினில் எளியவனாய்க் கலை நிலையில்
ஒளியவனாய்க் கருமம் காணும்
நீட்சியினில் நெடியவனாய்ய் நேரலர்முன்
நேரலனாய் நீதி நேர்மை