பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ னி ய று ப து

41

 வாரி வழங்கும் வள்ளல்களும் மாரி வழங்கும் மேகங்களும் இவ்வாறு ஏகமாய்த் தெரிய வந்துள்ளனர். நீர்மை நிறையச் சீர்மை நிறைகிறது.


9.

வேதியர்க்குச் சீலமணி வேந்தர்க்கு வீரமணி
மாதவர்க்குச் சாந்தமருள் வாய்மையணி-தூதர்
தமக்கணிசொல் வன்மை தறுகண்மை துய்மை
அமர்க்கணிவில் வீரர் அமைவு.

(௬)
இ-ள்.

ஒழுக்கம் வேதியர்க்கு அழகு, வீரம் வேங்தர்க்கு அழகு; சாந்தம் அருள் சத்தியம் மாதவர்க்கு அழகு; சொல்வன்மை தீரம் தூய்மை தூதர்க்கு அழகு வில் வீரர் போருக்குச் சீரிய அழகு என்க.

சிலம்= நல்ல ஒழுக்கம்; தரும நீர்மை,

வேதத்தை ஓதி உணர்ந்தவர் வேதியர். உலக மக்கள் ஏதம் உறாமல் இனிது வாழ்ந்து வரப் போதனை புரிய உரியவர் ஆதலால் சீலமுடைமை அவர்க்குச் சிறப்பாகத் தெரிய வந்தது.

எல்லாரையும் அடக்கி ஆள உரியவர் ஆதலால் அரசர்க்கு வீரம் அதிசய அழகா அமைந்தது. மானமும் வீரமும் மன்னர் பேரணிகளாய் மருவி யுள்ளன. அவ்வுண்மைகளே உலக சரித்திரங்கள் உணர்த்தி நிற்கின்றன. வீரம் என்பது விழுமிய நிலையது.

எவருடைய உள்ளங்களில் உண்மையும் கருனையும் தோய்ந்து வருகின்றனவோ அவர் ஒளி மிகப்பெற்று உயர்ந்து வருகிறார், சித்தசாந்தி அவருக்கு6