பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அணியறுபது


உவந்து புகழ்ந்து வருவர் ஆதலால் வசையின்மை இதற்கு உயர்ந்த சிறந்த அணி என வந்தது.


15. அற்றவர்க்கு ஞானமணி ஆழிசூழ் ஞாலநிலை
உற்றவர்க்கு மானம் உயரணி-முற்ற :உடையார்க் கணிபணிவே ஒன்றுமிலார்க்கெண்மை
படையாமை யேஅணியாம் பண்பு.

(கரு).

இ-ள்.

உலகப் பற்று அற்ற துறவிகளுக்கு ஞானம் அழகு. உலக வாழ்வில் உற்ற மக்களுக்கு மானமே உயர்ந்த அழகு; செல்வம் நிறையவுடையவர்க்குப் பணிவுடைமையே சிறந்த அழகு; இல்லாதவர்க்கு எளிமை யுறாமையே நல்ல அழகு என்க.

அவரவர்களுடைய நிலைமைக்கு உரிய தகைமைகள் வகைமையாய்த் தெரிய வந்தன. ஞானம் என்பது எது? அறியவுரியதை உரிமையா அறிவது.

உண்மையான பரம்பொருளுக்கும் உயிருக்கும் உள்ள உறவுரிமைகளை உணர்ந்து தெளிந்து உய்தி காண்பவர்கள் மெய்ஞ்ஞானிகளாய் விளங்குகின்றனர். இந்த ஞான ஒளியை நலமாப் பெற்றவரேயாவும் துறந்தவருள் அதிசய நிலையில் துதி கொண்டு நிற்கின்றார். ஞானம் தோய்ந்த துறவு வானம் தோய்ந்த ஒளியாய் வயங்கி வருதலால் இதற்கு அது அழகு என அமைந்தது.

ஈன நிலையில் இழியாமல் எவ்வழியும் செவ்வியராய்ச் சிறந்து நிற்கும் சீர்மை மானம் என வந்தது. இதைப் பேணி வரும் அளவே மனிதர் பெருமை பெற்று யாண்டும் உயர்ந்து வருகின்றனர்.