பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ னி ய று ப து

59


சொல்லும் சொல்லால் மனிதனது உள்ளநிலை உணர வருகிறது. தன் சொல் யாண்டும் மேன்மைபுடையதாய் விளங்கிவர வழங்கி வருபவனே மேலோனாய்த் துலங்கி வருகிருன்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
(குறள், 645)

மனிதன் எவ்வாறு பேசிவர வேண்டும் என்பதைத் தேவர் இவ்வாறு செவ்வையாய்ப் பேசியிருக்கிறார். வாயிலிருந்து வெளிவருகிற மொழி எவ்வழியும் இனிதாய் ஒளி மிகுந்து வரவேண்டும்.

கோள் மொழி கேளாதே; தோள் வலி தாழாதே; இரந்து வீழாதே; இழிவுற மொழியாதே.


17

மூக்குக் கணிபொடியை மோவாமை; மூதுரைகொள் வாக்குக் கணிபடிறு வாயாமை;-நோக்கிற்குக்
கூர்ந்து குறிப்பறிந்து கொள்ளலணி; உள்ளத்துக்கு
ஆர்ந்த அமைதி அணி.

(கஎ)
இ-ள்.

பொடியை முகராமை மூக்குக்கு அணி, படிறு படியாமை வாக்குக்கு அணி, குறிப்பறிந்து கொள்ளுதல் நோக்குக்கு அணி, உயர்ந்த அமைதி உள்ளத்துக்கு நல்ல அணி என்க,

மூக்கு வாக்கு நோக்கு உள்ளம் ஈண்டு உணர வந்தன. நான்கும் பாங்கு படிந்து வர ஒழுகி வருக.

மனிதனுடைய உறுப்புக்கள் சிறப்பாக அமைந்துள்ளன. உடல் வாழ்க்கைக்கு இதத்தையும்,