பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ ணி ய று ப து

61


பொடியை விடமுடியாமல் துறவியரும் துயருறு

வதை இதனால் அறிந்து கொள்கிறோமம். கெட்ட

தொடர்பு கேடாய் ஒட்டிக் கெடுத்து விடுகிறது.

மூக்கிலே பொடிஏற மூளையிலே மிடிஏறும்; வாக்கிலே பொய்ஏற வாழ்க்கையிலே புலை ஏறும்; நோக்கிலே பிழைகளைநேர் நோக்காமல் மனம்போன போக்கிலே போவதெல்லாம் பொல்லாத புரையாமே.

படிறு=வஞ்சம்; பொய். படிறு படி யா ம ல். வாக்கைப் பாதுகாத்து வருபவர் ஆக்கம் பல அடைந்து கொள்வர். வாய்மையே தூய்மையாம்.

புறத்தே காணுகிற காட்சியாலும் வாய்மொழிகளாலும் ஒருவனுடைய உண்மை நிலைகளை ஓர்ந்து தேர்ந்து கொள்வது கு றி ப் பு அறிதலாம். இந்த அறிவு மெய்யானது; மேலான சிறப்புமிகவுடையது.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் ::தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.
(குறள், 702)

புறக்குறிப்பால் அகத்தின் இயல்புகளைத் தெளிவாக உணர்பவனைத் தெய்வமாகப் பேணிக்கொள்ள வேண்டும் எனத் தேவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அமைதி என்பது ஆருயிர்க்குப் பேரமிர்தம். அரிய யோகிகளும் பெரிய ஞானிகளும் பெறவுரிய பேரின்ப நிலை சித்த சாந்தியே. புலையான பொறிவெறிகள் நீங்கித் தலையான மெய்யறிவு சார்ந்தவரிடமே நிலையான சாந்தி நிலை நிலவ நேர்கிறது.

யான்எனது என்பதின்றி எவ்வகைப் பொருளும் விட்டான் - - தான் எனச் சரிக்கின்றான்யார்? அவனையே அடையும்சாந்தி