பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அ ணி ய று ப து

 மாதுஇப் பரிசு தந்தைதாய் மகிழ வளர்வுற்று அரசிருந்த நீதிக் கிழவன் இறப்ப அவன் நெறிசேர் இளஞ்சேய் அவன்தவிசின் மீது ற்றதுபோல் முன்முளைத்த வெண்பல்விழவேறு எயிறுதிப்பப் பேதைப் பருவம் கடந்துமேல் பெதும்பைப் பருவம் நண்ணிணாள்.

தன்னே நிந்தைசெய் வெண்ணகை மேல்பழி சார
மன்னி அங்கது நிகரற வாழ்மனை வாய்தல்
முன்னி றந்திடு வேன்என ஞான்றுகொள் முறைமை
என்ன வெண்மணி மூக்கணி ஒருத்திநின் றிட்டாள்.

(பிரபுலிங்கலீலை)

மாயை என்னும் அழகிய மங்கைக்குப் பல் விழுந்து முளேத்தது; முதிய அரசன் இறந்துபோகப் புதிய இளவரசன் அந்தத் தானத்தில் எழுந்ததை ஒத்திருந்தது: அவளுக்கு மூக்கிலே புல்லாக்கு என்னும் அணி அணிந்தனர்; அந்த முத்து அணி தன்னை நிறத்தால் பழித்து நிந்தைசெய்த பல்லுக்கு எதிரே துக்கிட்டு மாண்டு பழி தீர்க்க நேர்ந்ததுபோல் நின்றது. பல்லைக்குறித்த இந்த வருணனைகள் அறிவுக்கு இனிய சுவை விருந்துகளாய் விளைந்த

முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை.

(திருப்புகழ், 1)

முத்தை ஒத்த பல்வரிசையுடைய தெய்வயானைக்கு நாயகன் என முருகப் பெருமானே இவ்வாறு துதித்துத் திருப்புகழை அருணகிரிநாதர் தொடங்கியிருக்கிறார். முறுவல் நகை மூரல் எயிறு தந்தம் எனப் பல்லுக்குக் காரணப் பெயர்கள் வந்துள்ளன.

புத்த பகவானது பல்லைத் தங்கக் கோயிலில் சேமித்து வைத்து இலங்கையில் பூசித்து வருகின்றனர். பூசனை அதன் மகிமைகளே விளக்கி யுளது.