பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அ ணி ய று ப து


பொருளில் ஒருவற்கு இளமையும், போற்றும்
அருளில் ஒருவற்கு அறனும்,-தெருளான்
திரிந்த ழ்ந்த நெஞ்சினான் கல்விஇம் மூன்றும்
பரிந்தாலும் செய்யா பயன்.

(அறநெறிச்சாரம்)


பொருளில் குலனும் பொறுமையில் நோன்பும்
அருளில் அறனும் அமைச்சில் அரசும்
இருளினுள் இட்ட இருள்மயிர் என்றே
மருளில் புலவர் மனம்கொண் டுரைப்ப.

(வளையாபதி)

இவை ஈண்டு நன்கு எண்ணி உணர வுரியன.

பொருள் உடலை வளர்த்து இவ் வுலக அளவில் நின்றுவிடும். அருள்அறம்ஆகி உயிர்க்கு ஒளிபுரிந்து மறுமையின் பங்களையும் உரிமையுடன் அருளும்.

பொருளைப் போற்றியும், அருளைஆற்றியும்,தெருளுடன் ஒழுகி வருபவர் எவ்வழியும் செவ்வையாய் விழுமிய தலைமைகளில் விளங்கி வருகின்றார்.

வேண்டா விரதம் என்றது, உலகப்பொருள்கள் எதையும் விரும்பாத மேன்மையை. ஆசையற்ற இந்த நிராசை நிலை அதிசய மகிமையுடையது. ஆசையை வென்றவன் அகில உலகங்களையும் வென்றவனாய்த் தேசு மிகுந்து நிற்கிருன். ஆசையில் இழிந்தவன் நீசம் அடைய நேர்கின்றான்.

ஆசைக்கு அடியான் அகிலலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியான் ஆவானே-ஆசை
தனையடிமை கொண்டவனே தப்பா துலகம்
தனையடிமை கொண்டவனே தான். (நீதிசாரம்12)