பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

73

 விளக்கியுளது. எதையும் எவரிடமும் அது எதிர்பாராது: மனிதர் வெட்டிய குளத்தில் நீர் அருந்தாது: ஒருவர் வைத்த மர நிழலில் தங்காது: ஆதலால் இழிவு யாதும் நேராமல் மானமாய் அம்மான் வாழ்ந்து வருகிறது. இதைப் பார்த்தாவது யாசகம் செய்து வாழும் மனிதர் அந்த ஈன நிலையை விட்டு மானமா முயன்று மரியாதையுடன் வாழலாகாதா? இந்த உணர்வு நிலை இதில் உரமா உறைந்துள்ளது.

மயர் அற ஒருவர் தொட்ட
வண்குளப் புனலும் வேண்டா;
வியனிலப் பயிரும் மேயா;
வேலியும் கடத்தல் செய்யா;
முயல் இனம் வாழா நின்ற
முறைதிறம் பாமை நன்றென்று
உயலுறு மனத்தார் நோக்கி
உவப்பன கரிய கானம்.

(திருவானைக்காப் புராணம்)

அணவு கானகத்து ஒருவர்தம் முயற்சியால் அமைந்த
உணவும் நீரும்நீத்து ஆங்கவை ஒன்றினை ஒன்று
தணவு றாதமை தரல்தெரிந்து ஆர்ந்துறத் தழையும்
குணவு வாமுயல் தன்மைசொற் றிடினருங் குரைத்தே.

(தியாகராச லீலை)

அயலை அணுகாமல் முயல் வாழ்ந்துள்ள இயல்களை இவற்றால் அறிந்து கொள்கின்றோம்.

A life of independence is generally a life of virtue.

(Goldsmith)

சுதந்திரமான வாழ்வு தரும வாழ்வே.
தானே முயன்று தனிநிலையில் வாழினது
மானமுயர் வாழ்வாம் மதி.

10