பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முகவுரை 3

உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே. (சீவகசிந்தாமணி, 2752)

அழகு ஒர் அரிய பெரிய பேறு என்பதை இதனுல் நன்கு அறிந்து கொள்கின்றேம்.

ஆடவரினும் பெண்களிடமே அழகு வளமாய் வாய்ந்துளது. இயற்கை அழகை இனமா எய்தியிருப்பினும் செயற்கை அழகுகளை எவ்வழியும் அவர் வளமாச் செய்து கொள்ளுகின்றனர்.

பொன்மணிகளால் ஆன ஆபரணங்களை அவர் விழைந்து அணிந்து கொள்வதால் அணிகலன்கள் என அவை பெயர் பெறலாயின.

மண்ணுக்குப் பூசிப்பார்; பெண்ணுக்குப் பூட்டிப்பார்! என்பது நாட்டில் வழங்கி வருகிற பழமொழி.

பூடணங்களுக்கும் மகளிர்களுக்கும் உள்ள உறவுரிமைகளை இதனுல் உணர்ந்து கொள்கின்றேம்.

இழைகளும் குழைகளும் இன்ன முன்னமே மழைபொரு கண்ணிணை மடந்தை மாரொடும் பழகிய எனினும்இப் பாவை தோன்றலால் அழகுஎனும் அவையும்ஒர் அழகு பெற்றவே. (இராமாயணம்: 1-11-34)

காது அணி கழுத்து அணி மூக்கு அணி கை அணி கால் அணி விரல் அணி முதலிய அரிய அணிகலன்கள் எல்லாம் இதுவரை மங்கையர்க்கு அழகு செய்து வங்தன: இப்பொழுது சீதாதேவியின்