பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அணிய று பது



'23'.

நிலத்துக் கணிவளனே நீள்விளைவுக் கென்றும்

நலத்தஅணி நல்ல உரமே--தலத்தின்
உழவுக் கணிதுகளா வூன்றலே உற்ற
முழவுக் கணிதொனியே முன்.

(௨௩)

இ-ள்

நிறைந்த வளமே நிலத்துக்கு அழகு; நல்ல

உரமே விளைவுக்கு அழகு; புழுதியுற உழுதலே

உழவுக்கு அழகு; இனிய நாதமே முழவுக்கு அழகு

என்க.

முழவு=மத்தளம். இனிது முழங்கி இசை மருவி வருவது இங்ங்னம் வழங்கி வர நேர்ந்தது.

உலக உயிர்கள் நலமா வாழ்ந்து வருதற்கு நில வளமே மூல காரணமா யுள்ளது. மண் வளமாய் வாய்ந்திருந்தாலும் நெல் புல் முதலிய விளைபொருள்களை மிகுதியாக விளைத்து வருதற்கு உழுது எரு முதலிய உரங்களை நன்கு பரப்பி வர வேண்டும்.

உயிர்க்கு உணவு போல் பயிர்க்கு எரு. உரம் என்னும் சொல் அதன் உறுதி உண்மைகளை உணர்த்தி உயர் நிலைகளை விளக்கி வருகிறது.

ஆழ உழுவதால் மண் தூளாய் மாறுகிறது. மண் பொடியானால் அது பொன் பொடியாம். நன்செய்க்கு நீர்: புன்செய்க்கு ஏர் என்பது பழமொழி. நீராலும் ஏராலும் விளைவுகள் பெருகி விய னுலகை எவ்வழியும் நயமாப் பேணி வருகின்றன.

நாழிமண் ஆழாக்குத் தூளாக நன்குழுதால்
வாழி வளங்கள் வளர்ந்து வரும்-ஆழிசூழ்