பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ னி ய று ப து

77



ஞாலம் உயிர்த்து வருவது நல்லுழவன்
கோலம் புரியும் குறி.

உழவன் செய்து வரும் தொழிலால் உலகம் வாழ்ந்து வருகிறது. அவ் வுண்மையை அனுபவங்கள் உணர்த்தி இனிது தெளிவித்து வருகின்றன.

உழவும் உலகமும்

உலகம் எனும் உயர்தருவுக்கு உறுதியாம்

மூலவேர் உழவே; வேறாய்

இலகுபல தொழில்களெலாம் இலைதழைபூ

கனிகாய்கள் எனவே நின்ற;

நிலவுலகம் என்றுமே நிலையாக

நிலைத்துவர நேரே ஏரே

பலவகையும் புரந்துவரும் பான்மையினால்

பாரின் உயிர் ஏரே பாரீர்! (1)
உயிரும் பயிரும்.

உண்ணுகின்ற உணவுகளால் உயிர்கள்உள;

அவ்வுணவோ, உழவன் கைகள்

பண்ணுகின்ற தொழில்களிலே பரவியுள;

ஆதலினால் பாரில் யாரும்

எண்ணுகின்ற தொழில்களெலாம் ஏருடையான்

தொழில் எதிரே இரவி முன்னே

நண்ணுகின்ற ஒளிகள்என நாணிஒளி

இழந்தயலே நடந்து போமே. (2)
உழவனும் உழைப்பும்.

காய்கின்ற வெயில் எல்லாம் காயத்தின்

மேல் ஏற்றுக், காட்டில் மூண்டு