பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



78

அணியறுபது


பாய்கின்ற முள்எல்லாம் பாதத்தின்
பால் ஏற்றுப், பனிநீர் வாடை
தோய்கின்ற துயர்எல்லாம் தோலாமல்
தோல் ஏற்றுத், தொழில்கை செய்தே
ஓய்வின்றி உழைத்துாட்டும் உழவன் போல்
உலகில் எவர் உதவி யுள்ளார்?



(3)

(இந்தியத்தாய் நிலை)

உலக உயிர்கள் உவந்து வாழ்ந்து வர உழைத்து ஊட்டி வருகிற உபகாரிகளை உரிமையோடு இவை இங்கே காட்டியுள்ளன. பாட்டாளிகளின் பான்மை மேன்மைகளைப் பரிவுடன் குறித்திருக்கும் இப் பாட்டுக்களின் பொருள் நயங்களையும் அருள் நலங்களையும் அரிய சுவைகளையும் குறிப்புக்களையும் கூர்ந்து ஓர்ந்து உணர்ந்து தெளித்து கொள்ள வேண்டும்.




24. நாட்டுக்குக் கோன்காப்பே நல்ல அணி; நாட்டிவந்த
ஈட்டுக் கணிநுகர்ந் தீதலே;-பாட்டுக்குக்
கேட்டவுடன் இன்பம் கிளத்தலணி, கேழ்பயிர்க்குப்
பாட்டமே பாகார் அணி.

(உச)
இ-ள்

அரசனது பாதுகாப்பே நாட்டுக்கு அழகு; அனுபவித்து ஈதலே ஈட்டிய செல்வத்துக்கு அழகு; கேட்டவுடன் இன்பத்தை விளேத்தலே பாட்டுக்கு அழகு; பருவ மழையே பயிர்க்கு அழகு என்க.

உரிய சமையத்தே படுகிற மழை பாட்டம் என வந்தது.பருவத்தில்பெய்வது பயன்பலசெய்வதாம்,