பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணி ய று ப து

91


செறிந்து விரிந்த தோகையும் நீல நிறமும் அழகிய தோற்றமும் வளமாய் மருவி யுள்ளமையால் மயிலே உயர்குல மாதர்க்கு உவமை கூறுவது இயல்பான கவி மரபாய் வந்துளது.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ? கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு

(குறள் 1081)

பேரழகுடைய மங்கைக்கு மயில் இதில் ஒப்பாயுள்ளது. மயிலை இடையில் வைத்தது ஒயிலை எண்ணி.

மயிலுடைச் சாயலாள் என்று சீதை இவ்வாறு தெரிய வந்துள்ளாள். வனவாச காலத்தில் சீதையை பிரிந்த பின்பு இராமன் தம்பியுடன் மதங்கமலைச் சாரலை அடைந்தான். அங்கே மயில்கள் உலாவுவதைக் கண்டான். தனது அருமை மனைவியை நினைந்து மயில்களை நோக்கிப் பரிதாபமாய்ப் பேச நேர்ந்தான். மயிலோடு உரையாடி யிருக்கும் முறையை ஒரு சிறிது அயலே அறிய வருகிறோம்.

ஓடா நின்ற களிமயிலே!
சாயற்கு ஒதுங்கி உள்அழிந்து
கூடா தாரின் திரிகின்ற
நீயும் ஆகம் குளிர்ந்தாயோ?
தேடா நின்ற என் உயிரைத்
தெரியக் கண்டாய்! சிந்தைஉவந்து
ஆடா நின்றாய் ஆயிரம்கண்
உடையாய்க்கு ஒளிக்கும் ஆறுண்டோ?

(இராமா: 4: 1: 27)

எனது மனைவியின் உருவ அழகுக்குத் தோல்வியடைந்து பருவரலோடு உள்ளம் புழுங்கி யிருந்த