பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

அ ணி ய று ப து


31. ஈகைக் கணியிரக்கம் இன்சொல்லே எய்திவரு
வாகைக் கணிபொறுமை வார்தலே-ஒகையுயர்
வாழ்வுக் கணிதருமம் வாய்தலே மாறாத
சூழ்வுக் கணிதான் துணிவு.

(ஙக)

இ-ள்

இரக்கமும் இன்சொல்லும் ஈகைக்கு அழகு: எய்தி வருகிற வெற்றிக்குப் பொறுமை அழகு; வாழ்வுக்குத் தருமம் அழகு; ஆலோசனைக்குத் தெளிவான துணிவு அழகு என்க.

இரங்கியருளும் பண்பு இரக்கம் என வந்தது, இனிய சொல் எவரையும் மகிழ்வுறச் செய்யும். கொடுக்கும் பொருள் சிறியதாய் இருந்தாலும் இந்தக் குண நீர்மைகள் அதைப் பெரிதாக்கி விடும்.

வாகை=வெற்றி. வாகுவின் வலியால் வென்று வருவது வாகை என வந்தது. வாகு=தோள்.

நாடிய பொருள்கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்
விடியல் வழிய தாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறு வோர்க்கே.

இராமபிரானது வெற்றித் திறலைக் கருதிக் கூறுவார்க்கு உளவாம் உறுதி நலன்களை இதனால் உணர்ந்து கொள்கிறோம். இத்தகைய வெற்றி வீரன் எவ்வழியும் பொறுமையைப் போற்றிக் கருணையை ஆற்றித் தருமத்தைக் காத்து வந்துள்ளான்,

புயத்துறை வலியர் ஏனும்

பொறையொடும் பொருந்தி வாழ்தல்