பக்கம்:அணியும் மணியும்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


99 பாண்டியன் அறிவுடை நம்பி பேரரசராக விளங்கியதோடு பெரும்புலவராகவும் திகழ்ந்தார். அவர் வாழ்வில் கண்ட பேரு மையாகக் குழந்தையின்பத்தை கூறுகின்றார். குழந்தையின்பத்தை அவர் சித்திரித்துக் காட்டும் காட்சி மறக்கமுடியாத ஒன்றாகும். திருவள்ளுவர் குழந்தையின்பத்தைப் பற்றிக் கூறும் பொழுது, அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகையாளவிய கூழ் என்று குழந்தையின் சிறுகையால் அளாவிய உணவின் இனிமையைக் கூறுகின்றார். பாண்டியன் அறிவுடைநம்பி பாடிய குழந்தையின்பத்தைப் பற்றிய பாட்டு அவருக்கு அழியாப் புகழை அளித்துவிட்டது. அவர் பாடிய பாட்டு ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது. அந்த ஒரு பாட்டே அவரைப் புலவர் வரிசையில் வைத்து எண்ணக்கூடிய சிறப்பைத் தந்துவிட்டது. 'படைக்கப்படும் செல்வம் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைமை மிக்க செல்வத்தை உடையராயினும், கையை நீட்டிக் கலத்தின்கண் கிடந்த உணவினைத் தரையிலே இட்டும், உடன் பிசைந்தும், வாயாற் கவ்வியும், கையால் துழவியும், நெய்யையுடைய சோற்றை உடம்பில் படச் சிதறியும், இங்ங்னம் இன்பத்தால் மயக்கும் மக்களை இல்லோர்க்கு வாழ்க்கையில் பயனாகிய பொருள் இல்லை' என்ற கருத்து அமையப் பாடியுள்ளார். படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும் உடைப்பெருஞ் செல்வ ராயினும், இடைப்படக் குறுகுறுநடந்து சிறுகைநீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும் நெய்யுடை அடிசல் மெய்பட விதிர்த்தும்