பக்கம்:அணியும் மணியும்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


103 முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்பது இக் கருத்தை அறிவிக்கும் பாடலாகும். இவற்றைப் போன்ற பல நன்மையோடு கூடிய உண்மைகள் புறநானூற்றில் சிதறிய முத்துகளைப் போல ஆங்காங்குக் கிடக்கின்றன. வாழ்வின் அனுபவத்தோடு அமைந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக நின்று, சிறந்த கருத்தமைந்த இத்தகைய மொழிகளைப் பொருள்மொழிகள் என ஆன்றோர் வழங்கி வந்தனர். உண்மைப் பொருள்களைக் கூறும் இப்பொருள் மொழிகள் பொன்மொழிகளாக விளங்கி இலக்கிய வளத்தை மிகுவித்துக் கற்போர்க்கு ஊன்றுகோல் போல் நின்று. வாழ்க்கையில் வழுக்கிவிழாமல் நன்மை செய்கின்றன என்று கூறலாம்.