பக்கம்:அணியும் மணியும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

காவும் அழுத; களிறழுத; கால்வயப்போர்
மாவும் அழுத; அம் மன்னவனை மானவே

- நகர் நீங்கு. 102

என்று அவர்களின் அழுகையைத் தனித் தனியே கூறி அவலத்தை மிகுவிக்கின்றார்.

இவ்வாறு சேண்தூரம் சென்று பிரிந்து வாழ்வதால் அவரைப் பிரிந்தவர் அடையும் துன்பத்தைவிட, உயிர் துறந்தவரைப் பிரிந்து வாழ்வது கொடுமையினும் கொடுமையாகும். அவர்களுள்ளும் நெருங்கிய உறவினருள் செறிந்த நட்பாலும், அன்பாலும், ஆழ்ந்த உணர்வாலும் உள்ளம் ஒன்றுபட்டவர்களுள் ஒருவர் பிரிந்தாலும் மற்றவருக்கு அத்துன்பம் மாறா வடுவாக நின்றுவிடுகின்றது. புறநானூற்றில், நட்பும் பெட்பும் கொண்டு நெல்லிக்கனியை அதன் பெருமையைச் சொல்லாது அவ்வைக்குக் கொடுத்த வள்ளலாக விளங்கிய அதியர்கோன் ஆருயிர் துறந்தபோது, அந்த அவலத்தைத் தாங்காமல் அரற்றிய அவ்வையாரின் கையறுநிலைப் பாடல், அவன் பேணிவந்த பாணரும் பாவலரும் சுற்றமும் பற்றுக்கோடு இன்றிச் செயலற்றுச் சோர்வுற்ற செய்தியைக் கூறுகின்றது. பாணர்பால் கொண்டிருந்த நட்பால், அவன் பெட்புடன் பெருவளம் நல்கி அவர்களோடு பகிர்ந்து மகிழ்ந்துண்ட மாண்பையும், நாவலர் நாவன்மை இழக்கும் நிலையையும், சுற்றத்தினர் சோர்வால் சிந்தும் கண்ணீரையும் தம் கண்ணீரைக் கொண்டு ஓவியமாகத் தீட்டக் காண்கிறாம்.

“அதியமான் தான் வாழுங் காலத்தில் சிறிய அளவுள்ள கள் கிடைத்தால் அதனை எங்களுக்குக் கொடுத்து அவன் மனமகிழ்வு கொள்வான்; மிகுந்த அளவுள்ள கள் கிடைத்தால் நாங்கள் பாட அவன் மகிழ்ந்து உண்பான். சிறு அளவு உணவு இருந்தாலும் அதனைப் பல கலத்திற் பகிர்ந்து பலரும் உண்ணத் தருவான். பெருஞ்சோருக இருந்தாலும் அதனைப் பலருக்கும்