பக்கம்:அணியும் மணியும்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


111 எவ்வாய் மருங்கிம் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட இவ்வாருகிப் பிறப்பதோ இதுவோ மன்னாக் கியல்வேந்தே என்று 'மன்னவர்க்குக் கிடைக்கும் வாழ்வா இது?' என்று கேட்கிருள். இதைப் போலவே தந்தை மறைய, நாடு பிறர் கைப்பற்ற, அதனால் வாடிய உள்ளத்தோடு நாட்டைவிட்டுச் சென்ற பாரிமகளிர், தாம் தந்தையோடு இருந்த நாளில் இருந்த முந்தைய வாழ்வையும், நாடிழந்து சிறுமையுற்றுப் பெருமை யிழந்த அப்பொழுதைய தாழ்வையும் எண்ணிப் பார்த்து வருந்தி ஒப்பிட்டுக் கூறுவது சிறந்த அவல ஓவியமாக விளங்குகிறது. 'மூவேந்தர் முற்றுகையிட்டு நாட்டைப் பற்றிக் கொள்வதற்கு முன் எம் தந்தை எங்களோடு இருந்தார். அன்றைய திங்களில் அவ்வெண்ணிலவில் எம் குன்றையும் பிறர் அடையவில்லை. இஃது அப்பொழுதைய நிலை. இப்பொழு தைய நிலை அதற்கு முற்றிலும் மாறிக் கிடக்கிறது. இன்றைய திங்களில் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றையும் கொண்டார்; எம் தந்தையும் எம்மோடு இல்லை' என்று இரண்டு நிலவுக்காட்சிகளில் அவர்கள் கொண்ட இனிமையையும் தனிமையையும் ஒரு சேரக் கூறி, முன் இருந்த வாழ்வின் உயர்வையும் பின் அடைந்த தாழ்வின் இழிவையும் எடுத்துக் கூறுகின்றனர். அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில் எந்தையும் உடையேம்எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில் வென்றெறி ழுரசின் வேந்தர்எம் குன்றுங் கொண்டார்யாம் எந்தையும் இலமே - புறம். 112 என்று அவர்கள் தந்தையைப் பெற்றிருந்த காட்சியையும், அவர் மறைந்ததால் ஆட்சியிழந்து பெருமை குன்றிவிட்ட நிலையையும் ஒருசேரக் கூறி அவல உணர்வை உண்டாக்குகின்றனர்.