பக்கம்:அணியும் மணியும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


நம் வாழ்வு இந்த நாட்டோடு எவ்வாறு இணைந்து, நம் உணர்வுகள் எவ்வாறு பிணைந்து அமைந்திருக்கின்றன என்பதை நாட்டு வணக்கப் பாடலில் நன்கு காட்டி நாட்டுக்கும் நமக்கும் உள்ள உறவைத் தெளிவுபடுத்துகின்றார்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே

என்று நாட்டுக்கும் நமக்கும் உள்ள உறவின் பழமையையும் பழக்கத்தையும் நன்கு காட்டுகின்றார்.

நாம் பிறந்து வளர்ந்ததும் நம்மைப் பெற்ற தாயார் தோன்றி வளர்ந்து மழலைகள் பேசிக் கன்னியராகிக் களித்து மகிழ்ந்ததும் இந்நாடே என்று கூறி, நாம் மட்டும் அல்ல நம் அன்னையரும் அவர் முன்னையரும் வாழ்ந்ததும் இந்நாடு என்பதை உணர்த்துகின்றார்.

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே - எங்கள்.அன்னையர் தோன்றி
மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே - அவர்
கன்னியராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந்நாடே

என்று, நாட்டுக்கும் நமக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைத் தம் பாட்டுத் திறத்தால் இசைத்துக் காட்டுகின்றார்.

பாரத அன்னையின் திருப்பள்ளி யெழுச்சியாக அமைக்கும் பாடலில் தூங்கும் நாட்டைத் துயிலெழுப்பி மக்களுக்கு உணர்வூட்டும் உயரிய பண்பைக் காண்கிறோம். பாரத அன்னையை எழுப்புவது போலப் பாட்டு