பக்கம்:அணியும் மணியும்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும்
    புகழ்ச்சி யில்லை

என்று, தமிழ்ப் புலவர்களின் பெருமையை நிலைநாட்டுகின்றார்.

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் போன்று அறியாமையால் ஆழ்ந்திருக்கும் அனைவரும், தெள்ளு தமிழமுதின் சுவையைக் கண்டால் அவர் போன்று அழியா வாழ்வு பெற்று விழி பெற்று உயர்வடைவர் என்பதைக் காட்டுகிறார். உள்ளத்தில் எழும் உண்மையொளியால் தீஞ்சுவைத் தமிழில் கலைப்பெருக்கும் உண்டானால், நாட்டில் மொழியுணர்வும் ஒளிமிக்க வாழ்வும் உண்டாகும் என்பதை அறிவுறுத்துகிறார்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின
    வாக்கினிலே ஒளியுண் டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெலாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் தம் சிறப்புக் கண்டார்.

என்று தமிழின் சுவையையும் கவியின் பெருமையையும் உணர்த்துவதைக் காண்கிறோம்.

பாரதியின் பெருமை, நாட்டையும் மொழியையும் தனித்தனியே சிறப்பித்துப் பாடியதில் மட்டும் அமையவில்லை. நாட்டையும் மொழியையும் ஒன்றாக இணைத்து மொழிப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வேறாகப் பிரிக்க முடியாது என்று கூறுவதில்தான் அவர் பெருமை புலப்படுகிறது. தமிழையும் தமிழ் நாட்டையும் ஒன்றுபடுத்திப் பாடி மொழியையும் நாட்டையும் பிரிக்க முடியாது என்ற உணர்வை ஊட்டக்