பக்கம்:அணியும் மணியும்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


129 ‘என்று கருதப்படுகிறது என்ற முடிவு செய்யலாம் என முடிக்கும் பற்றற்ற தன்னுணர்வு கலவாத புறநிலை வாக்கியங்களைக் காணமுடியாது. தெளிவாக அறுதியிட்டுக் கூறும் வாக்கியங்களே அவர் வாக்கியங்களாகும். வேண்டும் வேண்டாம் கூடும் கூடாது' என்று அறுதியிட்டுக் கூறும் வாக்கியங்கள் அவரிடம் மிகுதியாகக் காணப் படுகின்றன. "துப்பாக்கி பீரங்கி வேண்டுமா?" ‘'வேண்டாம் வேண்டாம்'. "பழந்தமிழ் நாட்டைப் புதுமுறையில் காண்டல் வேண்டும்" 'தொண்டர் கூட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும். தேவையானவற்றை நல்கல் வேண்டும்”. வேண்டுகோள் வாக்கியங்கள் மிகுதியாக உள்ளன. 'நடுக்கமின்றிக் கிராமங்களுக்கும் புறப்படுவார்களாக'. அடுக்குத் தொடர்கள் அவர் வாக்கியத்தின் தனிச் சிறப்பாகும். "அவர்கள் வயிற்றில் வீரப்பிள்ளைகள் பிறந்தார்கள் - இந்நாளிலோ வெட்கம்; வெட்கம்'. 'உண்மைத் தமிழ் நாட்டைக் காண எழுங்கள் எழுங்கள்' “வேலையில்லை என்று எவரும் கருதல் வேண்டு வதில்லை; வேலை உண்டு; உண்டு'. வியப்புச் சொற்கள் இடையில் இடம் பெறுகின்றன. 'நீண்டநாள் வாழ்விற்கு அல்லவை செய்யா அரசு வேண்டற் பாலது என்பதற்கு