பக்கம்:அணியும் மணியும்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


133 உள்ளது சிறத்தல், இயற்கையோடியைந்த இன்ப அன்பு வாழ்க்கை முதலியன அவர் அமைக்கும் தனித் தொடர்களாகும். 'விரிவுரை வேண்டுங்கொல்' கொல் என்பது வியப்பிடைச் சொல்லாக வந்துள்ளது. வியப்புச் சொல் இடைஇடையே வருவது இயற்கையாகிறது. ஆக்கச் சொல் போட்டு வாக்கியங்கள் முடிப்பது என்ற நியதிக்கு அவர் கட்டுப்படவில்லை. அதுவே நமது தலையாய கடமை என்று முடிப்பாரேயன்றி, ‘கடமையாகும்' என்று பொதுவாக முடிப்பதில்லை. 'அதுவே ஒத்துழையாமை என்று முடிப்பாரேயன்றி 'ஒத்துழையாமை ஆகும் என்று முடிப்பதில்லை. வியங்கோள் வினைமுடிபுகள் மிகுதியாக இடம் பெறுகின்றன. 'ஊக்கம் கொள்ளுவோமாக' 'அடங்கியிருத்தல் காண்க தற்கிளத்தல் வாக்கியங்கள் மிகுதியாக உள்ளன. கேட்டுக் கொள்கிறேன். 'முயலுமாறு வேண்டுகிறேன் 'சிலவற்றைக் குறிப்பிடுகிறேன் 'ஆண்டவனை வழுத்துகிறேன் 'நான் கூறுவேன்' இவையெல்லாம் தற்கிளப்பு வாக்கியங்களாகக் கொள்ளலாம். முன்னிலை அறிவுரை வாக்கிய முடிபுகளை மிகுதியாகக் காணலாம்.