பக்கம்:அணியும் மணியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

இப்பொழுது வரன்முறைக்கு அஞ்சி அடங்கிவிட்டால் எதிர்காலத்தில் எக்காலத்திலும் ஆட்சி வரும் வழியில்லை என்பதைக் காட்டுகிறாள். இந்த வரன்முறை என்ற நியதிக்கு அடங்கிக் கிடந்துவிட்டால் எந்தக் காலத்திலும் அவள் வழி மர்பினர்க்கும் ஆட்சி கிடைக்காது என்றும், இராமனை அடுத்தும் இவன் ஆட்சிக்கு வர இயலாது என்றும் எடுத்துக் கூறுகின்றாள். இப்பொழுது இழக்கும் உரிமையால் இனி அடுத்து இழக்கும் உரிமைகளை அடுக்கிக் கூறுகிறாள்.

இராமன் ஆட்சிக்கு வந்தால் கோசலைக்கு வரும் உயர்வையும், கைகேயி அடையப்போகும் தாழ்வையும் எடுத்துக் கூறுகிறாள். எந்த வரன்முறைக் காரணத்தைக் கூறி அதை மீறினால் புகழ் கெட்டுவிடும் என்று அஞ்சுகிறாளோ, அதே வரன்முறையை மீறாமல் இருப்பதனாலும் புகழுக்கு வரும் கேட்டை உணர்த்துகிறாள். உலகில் நன்மை வாழ்வது மக்களுக்குப் புகழ்மீது உள்ள ஆவலால்தான் என்பதை நன்றாக உணர்ந்தவள்; அதனால் அந்தப் புகழாசையைக் காட்டியே அவள் உள்ளத்தின் நன்மையையும், தூய்மையையும் மாற்ற முனைகிறாள்.

"இன்னலும் வறுமையும் தொடர அதனால் உன்னை அடுத்துவந்து கேட்போர்க்குக் கொடுத்துதவும் ஆற்றலும் உரிமையும் இழந்து கொடுத்துப் புகழ் பெறும் சூழ்நிலையை இழந்து, அதே வருத்தத்தால் உள்ளம் உடைந்து விம்மிப் பொருமி மாண்டுபோக மனம் விரும்புகிறாயா?" என்று. அவள் புகழ் விரும்பும் உள்ளத்தையும் துண்டி விடுகிறாள். அவள் தன்னலத்தின் மற்றொரு வெளிப்பாடு புகழ் வேட்கை என்பதை நன்குணர்ந்த மந்தரை, புறஞ்சுவர்க்கோலஞ் செய்யும் வெளிப்புகழை இழக்கும் நிலையை இழிந்த நிலையாக எடுத்துக் காட்டுகிறாள். தன்னலத்தின் மற்றொரு வெளிப்பாடு பெண்களுக்குப் பிறந்த வீட்டில் கொண்டுள்ள பற்றும்