பக்கம்:அணியும் மணியும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

பற்றிப் பேசமுடியும் என்பதை நண்குணர்ந்த அடிகள், தக்க விடத்தில் அவள் பண்பைப் பாராட்டுமாறு செய்து, முழுமையான காட்சியாக அமைத்துக் காட்டி, நலனும் பண்பும் வெளிப்படுமாறு செய்து, கண்ணகியைப் பற்றிய கோவலன் முழுவறிவையும் காட்டுகிறார்.

வாழ்விலும் வழிநடையிலும் அவனுக்குத் துணையாகப் பங்கு கொண்ட பிறகுதான் அவள் பண்பை அவனால் முழுமையும் அறிய முடிகிறது. தொடக்கத்தில் ‘பொன்னே’ என்று பாராட்டிய அவன், பின்னரும் ‘பொன்னே’ என விளித்தாலும், முதற்கண் ‘பொன்னே’ எனக் கூறியதற்கும் முடிவில் ‘பொன்னே’ எனக் கூறியதற்கும் காரணங்களும் கருத்துகளும் வேறாக உள்ளன. அழகால் பொன்னைப் போன்றவள் என்று கூறிய அவன். சுடச்சுட ஒளிரும் பொன் போலத் துன்பம் படப்பட மிளிரும் பண்புடையாள் என்ற காரணத்தால், ‘பொன்னே’ என்று மீண்டும் கூறுகிறான்.

நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னோடு போந்தீங்கென்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி
நாணின் பாவாய் நீணில விளக்கே

கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி

என்று பாராட்டுகிறான். மாதரி அமைத்துக் கொடுத்த தனிவீட்டில் கண்ணகி அடிசில் ஆக்கி அளிக்க, அதனை உண்டு இனிதின் இருந்த கோவலன் அன்போடு அளவளாவும் போது, இவ்வாறு மகிழ்வுரை கூறுகிறான். அவள் பண்புச் சிறப்பைத் தன் அன்புச் சொற்களால் வெளியிடுகிறான். துன்பத்தை நோற்றாலும் பண்பு குறையாத தன்மையால் அவளைப் ‘பொன்னே’ என்றும், காற்றுக்கு அசைந்தாலும் தன்னிலை கெடாத கொடியைப்