பக்கம்:அணியும் மணியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

4. அணியும் மணியும்


புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்து புலமைமிக்கு விளங்கும் கவிகள் பல இயற்றிய சான்றோர்கள் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தையும், மணியெனத் திகழும் மணிமேகலையையும், அள்ளக் குறையா அழகுமிகு சிந்தாமணியையும், வான்புகழ் அளிக்கும் வள்ளுவத்தையும், கற்பனைமிகு இராமகாதையையும் பிறவற்றையும் ஈந்து இலக்கியவளத்தை மிகுதிப்படுத்தி அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் நளவெண்பா இயற்றி, மங்காப் புகழ் பெற்ற கவிகளுள் புகழேந்தியும் ஒருவர் எனில், அது மிகையாகாது.

புகழேந்தியின் கவிதை நலனையும் பாவினிமையையும் அணியழகையும் கற்பனைத்திறனையும் உணர்வார் அவர் உண்மையில் புகழ் ஏந்தற்குரியர் என ஒருப்பட்டு அந்த இலக்கியத்தின் பெருமையைப் பாராட்டுவர். வடமொழி வான்மீகத்தைத் தென்மொழியில் தெள்ளு தீஞ்சுவைக் கவிகளாக அணிபட இயற்றி அழியாப் புகழ் பெற்ற கம்பரைப் போலவே வடமொழிப் பாரதக் கதையின் கிளைக்கதைகளுள் ஒன்றாகிய நளசரிதத்தைத் தமிழில் நளவெண்பா என்ற பெயரால் ஒரு காவியமாக்கி, அதில் நெஞ்சை உருக்கும் நிகழ்ச்சிகளை, இன்பமும் துன்பமும் மிடைந்துவர, உவகையும் அவலமும் தங்கி அமையச் செப்பலோசை செவிக்கினிமை செய்ய வெண்பா