பக்கம்:அணியும் மணியும்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


46 வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன அஞ்சிலம்பே வாய்விட்டு அரற்றுவன - 15 என்று அவர் கூறுகின்றார். அன்னத்தின் மென்னடையையும் அதன் வண்ணத்தின் அழகையும் ஓவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார். அன்னத்தின் வெண்ணிறமும், அதன் தாளின் செந்நிறமும், சோலையின் பசுமை நிறமும் அவர் சொல்வன்மையால் கிழியில் தீட்டிய ஒவியமாக உருப்பெறுகின்றன. அன்னத்தின் வெண்ணிறத்தால் சோலையின் பசுமை நிறம் மாறிவிட்டது என்பதும், அதன் தாளின் செந்நிறத்தால் பொய்கைத்தலம் சிவந்துவிட்டது என்பதும் கற்பனை நயமாக அமைந்துள்ளன. நீள்நிறத்தால் சோலை நிறம்பெயர நீடியதன் தாள் நிறத்தால் பொய்கைத் தலம் சிவப்ப – 30 எனக்காட்டி, அன்னப்புள் அங்குத் தோன்றியதாக அவர் கூறுகின்றார். காதலிருவரின் சந்திப்பைக் கவின்படக் கூறிய உயர்வு கம்பரைச் சாரும் என்பது, இராமனும் சீதையும் முதன் முதலில் சந்தித்த சந்திப்பையும் அவர்கள் நோக்கிய நோக்கையும் புலப்படுத்தும் இடத்தில் விளங்குகிறது. பருகிய நோக்கெனும் பாசத்தாற் பிணித்து இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார் என்று. இதயம் கவரும் தொடரால் கூறிக் கற்போரின் உள்ளத்தைக் கவர்ந்த கம்பரின் கற்பனை, இராமாயணத்தில் அழியா இடம் பெற்றுவிட்டது. புகழேந்தியின் கற்பனையில் ஒரு புதுமை காணப்படுகிறது. கருங்குவளையில் செந்தாமரையும், செந்தாமரையில் கருங்குவளையும் பூத்த வியத்தகு காட்சி