பக்கம்:அணியும் மணியும்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


47 அவர்கள் காட்சியில் நிகழ்ந்தது எனக் கூறித் தம் கற்பனையின் மாட்சியைப் புலப்படுத்துகின்றார். கருங்குவளை போன்ற அவள் கரிய விழிகளைச் செந்தாமரை போன்ற செவ்வரி பரந்த அவன் விழிகள் சந்தித்தன என்று கூறுகின்றார். காதலர்க்கே உரிய பொது நோக்காக அவர்கள் எதிர் எதிராக நோக்கிய அந் நோக்குகளைக் கூறும்போழுது, கண்களுக்கு அமைக்கும் உவமைகளில் அவர் இக் கற்பனையை ஏற்றிக் கூறுகின்றார். தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப் பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு மதுநோக்கும் தாரானும் வாள்நுதலும் தம்மில் பொதுநோக் கெதிர்நோக்கும் போது - 88 என்பது அவர் அமைத்த சொற் சித்திரமாகும். அந்திப் பொழுது வந்து சேர்ந்ததை வெற்றி விருதுகளோடு உலவும் அரசர்க்குரிய செய்திகளாகக் கூறுவதில் அவர் கற்பனை சிறந்து விளங்குகிறது 'மல்லிகையாகிய வெண்சங்கை வண்டு வாய்வைத்து ஊதிமுழக்கஞ் செய்ய, மன்மதன் மலரம்புகளைத் தன் கரும்பு வில்லிலே தொடுத்து எங்கும் பரப்பி மெய்க்காவலாளனாக அமைய, முல்லையாகிய மென்மாலையை அணிந்துகொண்டு, மாலையாகிய் அந்திப் பொழுது மெல்ல நடந்தது' என்று அந்திநேரம் வந்து சேரும் நிலையை அழகுபடக் கூறுகின்றார். மல்லிகையில் வண்டு மொய்ப்பதும், முகைகள் அவிழ்ந்து மலர்களாக ஆவதும், முல்லை மலர்வதும் ஆகிய காட்சிகளைக் கொண்டு மாலைப்பொழுது மறையும் அந்திப் பொழுதின் அழகைத் திறம்படத் தீட்டுவதில் அவர் கற்பனை சிறந்துள்ளது. மல்லிகையே வெண்சங்கா வண்டுத வான்கரும்பு வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்