பக்கம்:அணியும் மணியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

நிற்கிறேன்” என்ற கருத்தை, ‘மணிவாழ் பாவை நடை கற்றன்ன என் அணியியல் குறுமகள் ஆடிய’ என்ற தொடரில் அமைத்துள்ளமையை அறிகின்றோம். “அக் குறுமகள் இப்பொழுது பெருமகளாகிவிட்டது தான் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அத்தகைய அறிவு எங்ஙனம் வந்ததோ” என்றெல்லாம் எண்ணி அலைந்து வருந்தும் அன்னையின் அன்புடைய நெஞ்சம் அவளைக் ‘குறுமகள்’ என்ற தொடரால் குறிக்கின்றது.

இவ்வாறு அன்புடை நெஞ்சத்தின் பண்புமிக்க எண்ணங்களையும் அவற்றால் தோன்றும் செயல்களையும் சங்கப் பாடல்கள் அறிவுறுத்தும் அழகை நாம் அப்பாடல்கள் கொண்டு அறியமுடிகிறது. அவை உணர்வின் ஓவியங்களாக அமைந்து, நெஞ்சில் எழும் அலையோசைகளாக நம் செவியில்படுகின்றன.