பக்கம்:அணியும் மணியும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

கேளார் கான்முடப்பட்டோர் பேணுநரில்லோர் பிணி நடுக்குற்றோர் முதலியவர்கட்கு உணவு கொடுக்கும் தொண்டினையும், சிறைச்சாலையை ஒழித்து அறச்சாலையை நிறுவும் தொண்டினையும் செய்வதாகக் கூறுகிறார். நாட்டில் அறம் நிறைந்தால் சிறைச்சாலைக்ட்கு இடம் இல்லை என்ற கருத்தையும் நுட்பமாகப் புகுத்துகின்றார். மணிமேகலையின் தொண்டினைச் சிறப்பிப்பதன் வாயிலாகத் துறவில் நிலைபெறுவதற்குத் தொண்டுதான் சிறந்த வழியென்பதையும், துறவின் பயனும் தொண்டு செய்தலே என்பதையும் உணர்த்துகிறார்.

உதயகுமரன்பால் இருந்த உறவு அறுவதற்கு நாட்டுக்குச் செய்யும் பொதுத்தொண்டும் நல்லோர் அறிவுரைகளும் காரணமாக விளங்குகின்றன. கணிகையர் குலத்தில் பிறந்து, தீத்தொழிலில் ஈடுபட்டு வாழ்வைப் பொதுமையாக்காமல் உலகத்தின் உயர் அறவியாகி நல்லோர் பலரும் நானிலமும் போற்றத்தக்க வகையில் அறிவுசால் தவத்தளாகி, ஆன்ற கேள்வியும் சான்றோர் தொடர்பும் பெற்று, உலகம் மதிக்கத்தக்க பேருள்ளம் படைத்தவளாகித் தனிப்பட்டவரிடம் கொண்ட உறவைக் களைந்து, உலகத்து உயிர்களோடு ஒன்றும் துறவுள்ளம் பெற்றுக் காவியத்தின் தலைவியாகவும், சமயத்தின் தலைவியாகவும் விளங்க, ஆசிரியர் அவளைப் படைத்துப் பெண்டிருள் பெருவிள்க்காகக் காட்டியுள்ளார்.

அமைதியற்ற சூழலில் துறவு உள்ளம் பெற்றுத் தொண்டாலும் தூய சிந்தையாலும் உறவு பற்று இவற்றை அறுத்து உலகத்துக்குத் தொண்டு செய்யத் துறவு உள்ளம் தேவை என்பது இக் காவியப் பண்பாக விளங்குவதால்தான், மணிமேகலை என்னும் நூல் வெறுஞ் சமய நூலாக விளங்காமல் மக்கள் மதிக்கும் மாண்புகளைப் புகட்டும் அறிவுரை பொருந்திய இலக்கியமாக வாழ்கிறது. சமயச் சார்பு மறைந்தாலும், மாந்தரின் மனவியல்பை உணர்த்துவதில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதியாகும்.