பக்கம்:அணியும் மணியும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

சிறப்பால் நல்வினை என்னும் மகன் பிறப்பான் எனவும், அவனே நற்கதிக்குக் கொண்டு போகும் உரவோன் எனவும் விளக்கம் தருகிறார்.

நற்றானம் சிலம நடுங்காத் தவம் அறிவர் சிறப்புஇந் நான்கும்,
மற்றாங்குச் சொன்ன மனைவியர்; இந் நால்வரவர் வயிற்றுள் தோன்றி
உற்றான் ஒருமகனே மேற்கதிக்குக்கொண்டு போம் உரவோன் தன்னைப்
பெற்றார் மகப்பெற்றார் அல்லாதார் பிறர்மக்கள் பிறரே கண்டீர்

- கேமசரி. 134

என்று கேட்பார் உள்ளம் ஈர்க்கும் வண்ணம் நால்வருக்கும் சேர்ந்து ஒரு நன்மகன் பிறப்பதாக நகை விளைவிக்கும் செய்திபோலக் கூறி நல்லறிவு கொளுத்தக் காண்கிறோம்.

வளமையுள்ள இளமையிலேயே நல்லறம் செய்ய வேண்டும் என்பதும், முதுமையில் அறஞ்செய்ய ஒல்லாது என்பதும், அவர்தம் கொள்கையாகும். அதனால் அவ்வழிப் போக்கனுக்குச் சீவகன் இக் கருத்தை உணர்த்துவதுபோலத் தம் கொள்கையை நிலைநிறுத்துகின்றார். அதை விளக்க அவர் கூறுவது சுவை பயப்பதாக உள்ளது.

முதுமை மிக்கான் ஒருவன் இளமை மிக்க கன்னி ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துகிறான். வளமை இருந்த இளமை வயதில் வண்மை செய்யாது அறஞ்சாரா முதுமை பெற்று, வாழ்வின் இறுதியில் வண்மை செய்து நல்வாழ்வைப் பெறலாம் என்று ஆவல் கொள்கிறான். வயது முதிர்ந்து நோயும் கனிந்து வாழ்வு மறையும் அந்திக் காலம் வந்து சேர்கிறது. அறஞ்செய்ய எண்ணங்கொண்டு அவன் பொதிந்து வைத்த