பக்கம்:அணியும் மணியும்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


97 பிறர்க்காக முயலும் பெரியோர்கள் இருப்பதால்தான் இவ்வுலக இயல்பு கெடாமல் இருக்கின்றது என்ற கருத்தை வற்புறுத்துகிறது. இப்பாடல் அத்தகைய நல்லோர்களின் இயல்புகளைப் பற்றி விரித்துச் சொல்கிறது. 'இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், அவர் தமியராக உண்ணார் யாரோடும் வெறுப்புக்கொள்ளார்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதுதீர்தற் பொருட்டுத் தம்மாலான முயற்சியைச் செய்வார்; புகழுக்காகத் தம்முயிரையும் கொடுத்துவிடுவர்; பழி வருவதாக இருந்தால் அதனால் உலக முழுவதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை கொள்ளார். இத்தகைய மாட்சிகள் நிறைந்தவர் சான்றோர்” என்று அவர்தம் இயல்பை எடுத்துக் கூறுகின்றது. உண்டால் அம்மஇவ் வுலகம்; இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலாேமுனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞசிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர் அன்ன மாட்சி யனைய ராகித் தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மை யானே - 182 என்பது அப் புறப்பாடலாகும். இந்தக் கருத்தை மேலும் வற்புறுத்துவது போல மற்றொரு பாட்டு அமைந்திருக்கிறது. தனிமனிதனின் வாழ்வுக்குக் குடும்பம் எவ்வளவு இன்றியமையாததோ பொது வாழ்வுக்கு அரசியல் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவிற்குச் சான்றோரின் தொடர்பு உள்ளத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று பிசிராந்தையாரின் பாட்டொன்று