உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

9

இயக்கத்தை நடத்துவதற்கு நாதியில்லை என்பது மாத்திரமல்ல; அவர் ஆற்றல் வாய்ந்தவர் என்பதை இப்பொழுது ஒப்புக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார். அதைப் போல உன் விஷயத்திலும் எல்லோரும் உன்னை அங்கீகரித்ததாக நீ கருதிக் கொண்டு, நடைபோட்டுவிடக் கூடாது. எங்கெங்கேயிருந்து உனக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லை என்பது வெளியே தெரியாமலே கூட இருக்கலாம். அது உனக்கு புலப்படாமலேகூட இருக்கலாம். அந்த அங்கீகாரத்தையும் பெறுகின்ற அளவிற்கு - எப்படி நான் பேராசிரியருடைய அங்கீகாரத்தைப் பெற்று, அவராலேயே தலைவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிற அளவிற்கு வளர்ந்தேனோ, அந்த அணுகுமுறையை நீ கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இந்த மாவட்ட மாநாட்டில் உனக்கு கிடைத்த தலைமைப் பதவி நிலைக்கும் என்பதை மாத்திரம் உனக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

   இந்த மாநாடு ஒரு மாதத்திலே ஏற்பாடு செய்யப்பட்டது. நான் இடையிலே ஒருமுறை வந்து பார்த்தேன். நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் வந்து பார்த்திருக்கிறார்கள். தலைமைக்கழக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வந்து பார்த்துவிட்டுப் போனார். இன்றைய மாவட்ட மாநாட்டினுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் வந்து பார்த்துவிட்டுப் போனார். வீரபாண்டி ஆறுமுகமே வந்து பார்த்துவிட்டு, நிதிஉதவிகூட செய்துவிட்டுப் போனார் என்று கேள்விப்பட்டேன். பேச்சிலேதான் போட்டி; செயலிலே போட்டி கிடையாது அதைப்போல பக்கத்து மாவட்டத்திலே உள்ள திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு