உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

படைத்தவன். 1945 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியிலே அடித்துப் போட்டார்களே, அதைவிடவா எனக்கு ஆபத்து வந்து விடப்போகிறது? இந்த ஆட்சியில் போலீஸ்காரர்களே என்னை அடித்தார்களே, அதைவிடவா நடந்து விடப்போகிறது. நான் கவலைப்படவில்லை. ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு போலீஸ்கூட இல்லை என்றால் யாருக்குக் கேவலம் ? எனக்குக் கேவலமா? இல்லை. அல்லது நாடாளுகின்ற மகாராணி ஜெயலலிதாவுக்கு கேவலமா என்றால் இல்லை. அவர்களுக்கும் கேவலம் இல்லை. ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து, நாளைக்கு உங்களை மேலிடத்திலிருந்து மனித உரிமைக் கழகத்திலிருந்து உங்களை கேள்வி கேட்கும்போது, யார் இதற்கு பொறுப்பு என்று பதில் சொல்ல வேண்டிய போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்களே - டி.ஜி.பி., டி.ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி. என்றெல்லாம் இருக்கிறார்களே, அவர்களுக்கல்லவா இந்தப் பொறுப்பு இருக்கிறது. - அதனால் நான் இப்படியல்லவா கேட்க வேண்டியிருக்கிறது. கண்ணகி மதுரைத் தெருவிலே கேட்டாளாம், "தெய்வமும் உண்டு கொல்? தெய்வமும் உண்டு கொல்?" என்று. தெய்வமும் இருக்கிறதா என்று கேட்டாளாம். அதைப் போல, நான் விழுப்புரம் மாநாட்டைப் பார்த்து "போலீசும் உண்டு, கொல்? போலீசும் உண்டு கொல்? என்றல்லவா கேட்க வேண்டியிருக்கிறது. பதில் வரும் எனக்கு. 'போலீசும் உண்டு. கொல்' என்று. இதுதான் இன்றைய ஆளுங்கட்சியினுடைய இலக்கணம். போலீஸ் உண்டு, ஆகவே கொல் என்று கொல்லக்கூடியவர்கள் இன்றைக்கு நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்றார்கள். இதை எந்த வகையிலே நாம் எதிர்க்கப் போகிறோம்.