உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

பேராசிரியரும், பொதுக்குழு உறுப்பினர்களை யெல்லாம் அழைத்துப் பேசிய நேரத்தில், குறைந்த பட்சம் ஒரு 25 கோடி ரூபாயாவது தேர்தல் நிதியாக நாம் சேர்க்கவேண்டும் என்ற கருத்தை நான் வெளியிட்டேன். அதைத் தொடர்ந்து மாவட்டக் கழகச் செயலாளர் களுடைய கூட்டத்தைக் கூட்டி மாவட்டங்களுக்கு, இவ்வளவு ரூபாய் என்று வரையறுத்துக் கொடுத்து நிதி திரட்டித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதன்படி எல்லா மாவட்டங்களும் நிதி தந்து முடித்து விழுப்புரம் மாநாட்டிலே அது அறிவிக்கப்படும் என்று சொன்னேன். அறிவிக்கப்பட்டு அதிலே எந்த மாவட்டம் முதல் நிலையிலே இருக்கிறதோ அந்த மாவட்டத்திற்கும், அதற்குப் பிறகு அடுத்த நிலை, மூன்றாவது நிலை என்ற மாவட்டங்களுக்கு, அய்யா, அண்ணா, கழகம் பிறந்தநாள் கொண்டாடப்படுகிற முப்பெரும் விழாவில், தலைமைக் கழகத்தின் சார்பில் பரிசளிக்கப்படும் என்றும் முரசொலி கடிதத்திலே எழுதியிருந்தேன். அதன்படி மாவட்ட ரீதியாக வந்த தொகையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ல தேனி மாவட்டத்திற்கு 50 லட்ச ரூபாய் என்று நிர்ணயித்தோம். அங்கே தேனீக்கள் சரியாக பறக்கவில்லை. தேனீக்கள் பறக்கவில்லையோ, பூக்கள் கிடைக்க வில்லையோ தெரிய வில்லை. அங்கே இதுவரையில் வந்திருக்கிற ரூபாய் 28 லட்சம்தான். நிர்ணயித்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொகை 50 லட்சம். நல்ல திறமையான தேனீக்கள்தான். ஆனால் 45 லட்சம்தான் சேகரித்துக் கொடுத்திருக் கிறார்கள்.