உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். 50 லட்சத்தையும் கொடுத்து விட்டார்கள். கன்னியாகுமரி சின்னஞ்சிறு மாவட்டம். 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. 50 லட்சமும் வழங்கி விட்டார்கள். நீலகிரி மாவட்டம் சின்னஞ்சிறு மாவட்டம். ஏற்கனவே தேயிலைப் பிரச்சினையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிற மாவட்டம். நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். 50 லட்சமும் வழங்கப்பட்டுவிட்டது. சிவகங்கை மாவட்டம். அதுவும் சிறிய மாவட்டம்தான். நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். அந்த 50 லட்சமும் வழங்கிவிட்டார்கள். நாகப்பட்டினம் மாவட்டம். நான் பிறந்த மாவட்டம். அங்குதான் நான் பிறந்த திருக்குவளை இருக்கிறது. அந்த மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம் ரூபாய். அவர்கள் வழங்கியது 51 லட்சம் ரூபாய். திருவாரூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம் ரூபாய். அவர்கள் வழங்கியது 51 லட்சம் ரூபாய். கரூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது லட்சம். சிறிய மாவட்டம்தான். வழங்கியது 54 லட்சம். 50 பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது 50 லட்சம். வழங்கியது 55 லட்சம். நாமக்கல் மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம். சேலத்தோடு ஒட்டியிருக்கிற மாவட்டம். அந்த நாமக்கல்