உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை 50 லட்சம். அவர்கள் வழங்கியது ஒரு கோடியே ஒரு லட்சம். எனக்கு முதலில் ஒரு பயம் இருந்தது. நாமக்கல் என்று பெயர் இருப்பதால் நாமம் போட்டுவிடுவார்களோ என்று. (சிரிப்பு) ஆனால், நாமம் போடவில்லை, வேறு சில மாவட்டங்களைப் போல! 50 லட்சம் ரூபாய் கேட்டோம். ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார்கள். விருதுநகர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி. கொடுத்தது என்னவோ 70 லட்சம்தான். நெல்ை லை மாவட்டம் பெரிய மாவட்டம். பல முன்னணியினர் எல்லாம் இருக்கிற மாவட்டம். தலைவர்கள் ஏராளமாக இருக்கிற மாவட்டம். அதனாலேயே குறைந்து விட்டதோ என்னவோ. நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். 65 லட்சம் தான் வழங்கப்பட்டிருக்கிறது. மதுரை மாவட்டம் ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது. 81 லட்சத்து 50ஆயிரம் ரூபாய்தான் வந்திருக்கிறது. பாக்கி வரவில்லை. திருச்சி மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ரூபாய். வடசென்னை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ரூபாய். தூத்துக்குடி ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடி ஐந்து லட்ச ரூபாய்.