உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

தருமபுரி மாவட்டம் ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டது ஒரு கோடியே ஆறு லட்சம் கொடுத்து விட்டார்கள். விழுப்புரம் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். கொடுத்தது ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய். அதிலே தான் மாவட்டக்கழக அலுவலகம் கட்ட 50 லட்சம் ரூபாய் கேட்கிறார் பொன்முடி. பொதுச்செயலாளருடன் கலந்துபேசி பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். (மேடையிலேயே பொதுச் செயலாளரிடம் - கொடுக்கலாமா? வினவுகிறார் தலைவர் கலைஞர்). என தஞ்சை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். பஞ்சத்தால் பரிதவிக்கிற அந்த மாவட்டத்தில் ஒரு கோடியே பதினோரு லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டார்கள். திருவள்ளூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ஒரு கோடி ரூபாய். ஒரு கோடியே 19 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் - வறட்சியான மாவட்டம்தான். ஒரு கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரு கோடியே 20 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். வேலூர் மாவட்டத்திற்கு ஒரு கோடி நிர்ணயிக்கப் பட்டது. ஒரு கோடியே 25 லட்சம் கொடுத்திருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் ஒரு கோடி அவர்களுக்கு நிர்ணயித்தது. முதலிலேயே ஒரு கோடி ரூபாயை பன்னீர் செல்வம், ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார். இன்றைக்கு 56 லட்சம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 1 கோடியே 56 லட்சம்.