உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

தடுக்க, திருட்டை, கொலையைத் தடுக்க ஆயுதங்களைப் பயன்படுத்துங்கள். ஆனால் இதுபோன்ற பொது நலப் பாதுகாப்பு விஷயங்களில், தி.மு. கழகக் கூட்டங்களை நடத்தவும் விட மாட்டோம், அப்படித் தப்பித் தவறி நடத்த அனுமதித்தாலும் அதைச் சரியாக நடத்த விடமாட்டோம், பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்றால், நாளைக்கு வரப் போகின்ற கேள்விக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்? இப்போது கேள்வி வருகிறதே; நீதிமன்றங்களையே எங்களால் மடக்க முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்த உங்களுக்கு, இப்போது நீதி மன்றங்களே உங்கள் தலையிலே அடிக்கிறதே! இந்த ஆட்சியாளர்களின் தலையிலே இப்போது நீதிமன்றங்கள் அடிக்கின்றன. எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். இப்படி 90 ரூபாய் சம்பளத்திலே இருந்த கான்ஸ்டபிளுக்கு முதன்முதலாக 275 ரூபாய் சம்பளம். 91-96 ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு 1714 கோடி ரூபாய். நான் இந்தக் கமிஷன் போட்ட பிறகும்கூட, பரிணாம வளர்ச்சியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் 91 - 96 வரையில் ஐந்து வருஷத்திற்கு 1714 கோடி ரூபாய்தான் ஜெயலலிதா ஆட்சியிலே காவல்துறை மானியமாக ஒதுக்கப்பட்டது. ஆனால், 96 முதல் 2001 கழக ஆட்சியில், காவல்துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகை 3,988 கோடி ரூபாய் என்பதை காவல் துறை நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் கமிஷன் போட்ட பிறகு, வளர்ந்த சம்பளத்தினுடைய விகிதாச்சாரத்தில் ஜெயலலிதா