உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பொறுப்பாளி அல்ல. யாரோ ஒருவர் இருவர் ஒருசில துறைகளிலே செய்கின்ற தவறுகளுக்காக மொத்த சமுதாயமும் அரசு அலுவலர்கள் அத்தனை பேரும் தவறானவர்கள் அல்ல. ஆசிரியர்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல. எனவே நான்கு பேர் தவறு செய்வதை 4000 பேர் செய்வதாக தவறான பிரச்சாரத்தை இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள். இவைகளை எல்லாம் மனதிலே வைத்துக் கொண்டு நாட்டில் நடைபெறுகின்ற நாசகார செயல்களுக்கெல்லாம், அந்தச் செயல்களிலிருந்து மக்களை விடுவிக்க நாம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றி கவனியுங்கள். இங்கே பேசிய கழக முன்னோடிகள் எல்லாம் போராட்டம் வேண்டுமென்றார்கள். மாநாட்டுத் தலைவர் தம்பி ஸ்டாலின், நேற்றையதினம் பேசும்போது, போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் பொறுப்பு தனக்கு வேண்டுமென்றார். அப்படிப்பட்ட சுயநலங்கள் போராட்டத்தில் வருவதை நான் விரும்புகிறவன். பொருளாளர் ஆர்க்காடு வீராசாமியும் இங்கே பேசும்போது போராட்டம் வேண்டுமென்றார். அதைப் போலவே தம்பிகள் சிவா, விடுதலை விரும்பி, ராஜா, டி.ஆர். பாலு இப்படி பலரும் ஒரு போராட்டத்திற்கு தி.மு.க. தயாராக வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். நான் இங்கே சில தீர்மானங்களை உங்கள் முன்னால் வைக்க விருக்கிறேன். பொதுவாக மாநாட்டில் பல தீர்மானங்களை பலரும் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் பேசுவது வழக்கம். தனித்தனி தலைப்புகளில் பேசியவர்களில் இன்னும் கூட பல பேருக்கு தங்களைப்