உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

பட்டியலில் சேர்க்கவில்லையே என்ற கோபம் இருக்கிறது, அடுத்த மாநாட்டில் இவர்களில் சிலபேர் விட்டுப் போய் அவர்கள் எல்லாம் சேர்க்கப் படுவார்கள். எனவே இந்த மாநாட்டில் தீர்மானக் குழுவின் தலைவர் பொன். முத்துராமலிங்கமும், செயலாளர் வெற்றி கொண்டானும் மற்றும் தீர்மானக் குழு உறுப்பினர்களும் கலந்து பேசி சில தீர்மானங்களை வடித்தெடுத்துக் கொடுத்து அதைப்பற்றி நேற்று முன்தினம் நடை பெற்ற தலைமைக்கழக செயல்திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுத்திருக்கிறோம். இந்தத் தீர்மானங்களின் முடிவாக இவைகளையெல்லாம் வலியுறுத்த ஒரு போராட்டத்தையும் நான் அறிவிக்க விருக்கிறேன். அதற்கு முன்பு தீர்மானங்களைப் பற்றி சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். காவேரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதி முடிவு அறிவிக்கப்படுவதற்கிடையே ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தீர்க்க, பிரதமர் தலைமையில் உள்ள காவேரி ஆணையத்தைத் தேவைப்படும்போதெல்லாம் கூட்டி, உரிய முடிவெடுத்து, தமிழக விவசாயிகளை வாழ வைக்க வேண்டுமென்று வலியுறுத்தியும், என்பது முதல் அறிவிப்பு. காவேரி பிரச்சினை பற்றி பிரதமரிடத்தில் ஆணையத்தைக் கூட்ட வேண்டுமென்று நான் நேரடியாகவே கேட்டுக் கொண்டேன். முரசொலி மாறனை மருத்துவ மனையிலே அவர் பார்க்க வந்த போது, மாறனின் உடல்நிலை பற்றி பேசியதை விட அதிகமாக தஞ்சை, திருச்சி பகுதியிலே வாழ்கின்ற டெல்டா பகுதி உட்பட வாழ்கின்ற விவசாயிகளின் வேதனைகளைப் பற்றித் தான் பேசினேன். பேசியது மாத்திரமல்ல, காவேரி ஆணையத்தின் கூட்டத்தை