உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

விரோதமாக தனியாருக்குக் கொடுத்துவிட்டால் அதை யார் பொறுத்துக் கொள்ள முடியும் ? எனவே இந்தத் தீர்மானம் மூலமாக அதைக் கட்டுப்படுத்துகிறோம். அடுத்த தீர்மானம், அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்கும் “எஸ்மா” சட்டத்தையும், எதிர்க்கட்சியினரை ஒடுக்கும் நிலையில் தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளையும் மாநில அ.தி.மு.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும்; என் மீதும், நல்லக்கண்ணு, வரதராஜன், இளங்கோவன் ஆகியோர் மீதெல்லாம் ஒரு வழக்கு எஸ்மா சட்டத்தின் கீழ். எதற்கு எஸ்மா தெரியுமா ? நாங்கள் இந்த அம்மா பண்ணுகின்ற அக்கிரமங்களுக்கெல்லாம் எஸ் மா எஸ் மா என்று சொல்லவில்லையாம். அதனால் இவர்களையெல்லாம் தூண்டி விட்டோம் என்று வழக்கு. அவர்களை தூண்டிவிட்டது யார்? அவர்கள் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்ற பிறகுங்கூட, அவர்களை பொருட்படுத்தாமல், அவர்களுடைய கோரிக்கைகள் பற்றிப் பேச முன்வராமல், அவர்கள் தான் வேலை நிறுத்தத்தைத் திரும்பப் பெற்று விட்டார்களே, தொலைந்து போகிறார்கள் என்ற பெருந் தன்மையோடு கூட விட்டு விடாமல், பழி வாங்கியே தீருவேன் என்று வேலைக்கு வந்தாலும் வேலை செய்ய விடமாட்டோம் என்று சொன்னவர்கள் தூண்டிவிட்டவர்களா? அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்த நாங்கள் தூண்டிவிட்டவர்களா ? தூண்டி விடுவதென்றால் என்ன ? வேலை நிறுத்தம் செய்யுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். அவர்களை