உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அணிவகுப்போம்; அறப்போருக்கு! விழுப்புரத்தில் 2003, செப். 21 அன்று நடைபெற்ற மாபெரும் மாவட்டக் கழக மாநாட்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய எழுச்சிப் பேருரை வருமாறு:- இந்த மாநாட்டைப் பாராட்டிப் பேசிய நம்முடைய கழக முன்னணித் தோழர்கள் எல்லாம் இது மாவட்ட மாநாடல்ல, மாநில மாநாடு என்றார்கள். நான் என்ன சொல்லப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் என்று எனக்குப் புரிகிறது. இது மாநில மாநாடும் அல்ல. மாவட்ட மாநாடும் அல்ல. சொல்லப் போனால் இது மாநாடே அல்ல. இது நாடு. பேராசிரியருக்குத் தெரியும். இலக்கணப்படி மாநாடு என்றால், அளவைப் பெரிதாக குறிப்பிடுவது “மா” என்பதற்கு, “பெரிய” என்று பொருள். நான் இப்பொழுது அதற்கு நேர் மாறாக “மாநாடு" என்பதற்கு பதிலாக "நாடு" என்ற று குறிப்பிட்டதற்குக் காரணம், நாட்டுக்குள்ளேதான் மாநாடு நடைபெறும், இங்கே நாடே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்காக நான் அவ்வாறு குறிப்பிட்டேன். இந்த நாடு எனப்படும் மாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்ற எழுச்சிமிக்க நிகழ்ச்சிகளைப் பார்த்து நாமெல்லாம் பூரித்துப் போகிறோம். ெ னன்றால், இந்த எழுச்சிக்கு காரணகர்த்தாக்களாக ஏ