உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

இன்றைக்கு 40 ரூபாய். தி.மு.க. ஆட்சியில் மிளகாய் 30 ரூபாய். இன்றைக்கு 53 ரூபாய். - அடுத்த தீர்மானம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து பழிவாங்கப்படுவதையும், தி.மு.க. ஆட்சியில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், கூட்டுறவு பணியாளர்கள் என 40 ஆயிரம் பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பதையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களை மீண்டும் பணியமர்த்த அ.தி.மு.க. அரசை வலியுறுத்தியும்; அரசியல் சட்டத்தில் பாதுகாக்கப்பட்டுள்ள மதச் சார்பின்மை கொள்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், மத மாற்றத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியும் - அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் சட்டத்திற்கு ஆதரவாக அறிவிப்பு செய்தும், சிறுபான்மை மக்களின் மதஉணர்வுகளில் அ.தி.மு.க. அரசு தலையிடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தப் போக்கினை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தியும்; இது முக்கியமான தீர்மானம். அயோத்தியிலே ராமர் கோவிலை கட்டியே ஆக வேண்டுமென்று சட்டம் கொண்டு வருவோம் என்று ஒரு நாள் சொல்கிறார்கள். இன்னொரு நாளைக்கு இல்லை என்கிறார்கள். ஒருநாளைக்கு அகழ் வாராய்ச்சி என்கிறார்கள். இப்படியும் அப்படியுமாக குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில் நான் உறுதியாகக் கூறுகிறேன். அயோத்தியிலே ராமர் கோவில் கட்டுவதை தி.மு.க. எதிர்க்கும், எதிர்க்கும். அது ராமர் மீது எங்களுக்கு உள்ள வெறுப்பின் காரணமாக அல்ல.