உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

கோவில் விஷயத்திலே உங்கள் கொள்கை எனக்குப் பிடிக்கவில்லை” என்றார். நான் அவரிடம், என்ன சார், காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டு, பா.ஜ.க.விற்கு ஆதரவாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே, ஆர்.எஸ்.எஸ்.க்கு, இந்து முன்னணிக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களே, என்ன என்று கேட்டேன். அவர் சொன்னார். ஒரு பத்து ஏக்கர் நிலம் தான் சார் அது. பத்து ஏக்கர் நிலம் பெரும்பான்மை யினருக்கு சொந்தம் என்று சொன்னால் அதைக் பெரும்பான்மையை மதிக்க கொடுக்கவேண்டாமா? வேண்டாமா என்று கேட்டார். எனக்கு அப்போது ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. கதை என்றால் அண்ணா சட்டப் பேரவையிலே கூறிய கதை. பேராசிரியருக்கு நினைவிருக்குமென்று கருதுகிறேன். சட்டப் பேரவையில் நாங்கள் 15 பேர் எதிர்க்கட்சியிலே அமர்ந்திருக்கிறோம். அப்போது பெரும்பான்மை, சிறுபான்மை பற்றி பேச்சு வந்தது. பெரும்பான்மைக்குத் தான் கட்டுப்பட வேண்டுமென்று அங்கேயிருந்த காங்கிரஸ்காரர்கள் பேசினார்கள். அண்ணா பேசும்போது, கேரளாவில் ஒரு நிகழ்ச்சி நடந்ததாக பத்திரிகைகளிலே பார்த்தேன். அங்கே ஒரு கோவிலில் கொடி மரம் நடுவதற்காக அவர்கள் பழக்கப் படி, அந்தக் கொடி மரத்தை யானையின் துதிக்கையிலே வைத்து, அதற்கான குழியில் நடச்சொன்னார்கள். மேளதாள முழக்கத்துடன் அந்த யானை கொடி மரத்தை நடுவதற்காக வந்தது. ஆனால் அருகே வந்தபிறகு கொடி மரத்தை குழியிலே புதைக்க மறுத்தது. மேள தாளத்திற்கு யானை பயப்படுகிறதோ என்று நினைத்து, அதை நிறுத்தி