உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

122

பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்குள்ள சமுதாயக் கடமை, மத உரிமைகளைப் பயன்படுத்தி சிறிய சிறிய குட்டித் தேவதை கோவில்களில் அவைகளைப் பலியிடுவது ஆண்டாண்டு காலமாக இருந்து வருகின்ற ஒன்று. இன்றைக்கு ஏன் அதற்காக ஒரு சட்டம் ? அந்தக் கோவில் பூசாரிகள் சொல்கிறார்கள். இதெல்லாம் அய்யர்மார் கோவில்களுக்கு வருமானத்தைத் தேடுவதற்காகவும் இந்தக் குட்டித் தேவதைகளை யெல்லாம் ஒழிப்பதற்காகவும் நடத்தப்படுகின்ற சூழ்ச்சி என்று சொல்கிறார்கள். நான் அதை விட ஒரு படி மேலே போய், நீண்ட காலமாக இந்தியாவில் இரண்டு கலாச்சார மோதல் இருக்கின்றது. திராவிடக் கலாச்சார, ஆரியக் கலாச்சார மோதல் இருக்கிறது. ஆரியக் கலாச்சாரம் படிப்படியாக ஆதிக்கம் செலுத்துகின்ற கலாச்சாரமாக மீண்டும் மறுமலர்ச்சி பெறுகின்ற நிலைமையிலே ஆட்சிகள் நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட ஆட்சி தான் தமிழ் நாட்டிலே அமைந்திருக்கின்றது. அதனால் தான் யாக குண்டங்கள், ஓம குண்டங்கள், சங்கராச்சாரியார்கள் அன்றாடம் பத்திரிகைகளிலே அடிபடுகின்ற பெயர்களாக இருக்கின்றன. எனவே நம்முடைய திராவிடக் கலாச்சாரத்தை வீழ்த்த நடைபெறுகின்ற சூழ்ச்சிகளிலே ஒன்று தான் இந்த ஆடு, கோழிகள் வெட்டக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டிருக்கின்ற சட்டம் என்பதை நான் தெரிவித்துக் கொண்டு, அதை நீக்க வேண்டுமென்று இந்தத் தீர்மானத்தின் மூலம் வலியுறுத்துகிறோம். அடுத்த தீர்மானம் - அரசு நிர்வாகத்தின் எல்லா