உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

நிர்ணயம் செய்துவிட்டது. கழக ஆட்சியாக இருந்தால். உடனடியாக அந்த விலையை விட மேலும் நாற்பது ரூபாயோ. ஐம்பது ரூபாயோ உயர்த்தி விலை நிர்ணயித்துக் கொடுப்போம். இப்போது அந்த விலையும் கொடுக்கவில்லை. வாஜ்பய் அரசு நிர்ணயித்த தொகையையே கொடுக்க வில்லை. எனவே கரும்புக்கு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளின் கரும்புக்கான விலை, வட்டியோடு கிடைக்க வழி வகை செய்ய வேண்டுமென்று இந்தத் தீர்மானத்தின் மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடைசியாக 16வது தீர்மானம் நூறாண்டுகளுக்கு மேலாக பொதுக் கூட்டங்களுக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட, சென்னை கடற்கரை மணல் பரப்பில், அண்மையில் கூட விமான சாகசம், விநாயக சதுர்த்தி பிள்ளையார் சிலைகள் கடலிலே கரைப்பு போன்ற நிகழ்ச்சி களுக்கு பல்லாயிரக்கணக் கானவர்கள் கடற்கரையிலே கூடுவதற்கு அனுமதித்து விட்டு; தேசியக் கவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி கூட்டம் நடத்த முன் வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அனுமதி தராத போக்கினைக் கண்டிப்பதோடு, பத்திரிகை சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றின் குரல்வளையை நெரிப்பதுடன் எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகளைத் தொடருகின்ற அ.தி.மு.க. அரசின் போக்கைக் கண்டிப்பதோடு, இந்த எதேச்சாதிகார அடக்குமுறையை உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தியும்; வருகின்ற டிசம்பர் திங்கள் 1ஆம் நாள் திங்கள் கிழமை மத்திய மாநில அரசு அலுவலகங்களின் முன்னால்